‘சுப்பர் சிறைச்சாலை’நாளை திறக்கப்படுகிறது!

சர்­வ­தேச தர நிய­மங்­க­ளுக்கு அமை­வாக இலங்­கையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள  முத­லா­வது சிறைச்­சாலை நாளை திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஹம்­பாந்­தோட்டை அங்­கு­னு­கொ­ல­ப­லெஸ்­ஸ­யி­லுள்ள  மேற்­படி புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சிறைச்­சா­லையே தற்­போது ‘சுப்பர் சிறைச்­சாலை ‘ என்று அழைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது.  ஏனென்றால்  சிறைக்­கை­தி­க­ளுக்கும்  பார்­வை­யிட வரு­ப­வர்­க­ளுக்கும்  உயர் சொகுசு வச­திகள் வழங்கும் வகையில் இந்த சிறைச்­சாலை நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

சுமார் 9.5 பில்­லியன் ரூபா செலவில் 658 ஹெக்­டேயர் பரப்பில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள  இச்­சி­றைச்­சா­லை­யா­னது  இவ்­வ­ருடம் மார்ச்­மாதம் ஜனா­தி­ப­தியின் பங்­கு­பற்­று­த­லுடன்  திறக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில் இது பிற்­போ­டப்­பட்­டது.  இச்­சி­றைச்­சா­லை­யா­னது தங்­காலை சிறைச்­சா­லையின் போதிய வச­திகள் இன்­மையால் அங்கு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­து­வரும் சிறைக்­கை­தி­க­ளுக்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.    சுமார் 1500 சிறைக்­கை­தி­களை  இப்­பு­திய சிறைச்­சா­லையில் தங்­க­வைக்க முடியும்.

இத்­தி­றப்பு விழாவில் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் சிறைச்­சா­லைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ,   நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com