சுன்னாகம் வாள்வெட்டு சந்தேக நபர்கள் கைது!

சுன்னாகம் பகுதியில் நேற்று(2) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் மூவர் இன்று (3) காலை கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் முறையே 21,23,24 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

நேற்று இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின்போது வாள்வெட்டுக் காயமடைந்த இருவர் யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com