சுன்னாகம் கிணறுகளில் இன்னமும் கழிவு ஒயில் மிதக்கிறது – ஊர்மக்கள் விசனம்

சுன்னாக மின் நிலையத்திற்கு அருகில் உள்ள கிணறுகளில் இன்னமும் எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கின்ற அப்பகுதி மக்கள் tவடக்கு மாகாணசபையால் உருவாக்கப்பட்ட நிபுணர்பு குழு எண்ணெய் மாசு பெரியளவில் கலக்காத உரும்பிராய், நீர்வேலி, வட்டுக்கோட்டை, ஆகிய பிரதேச கிணறுகளில் நீர் மாதிரிகளை எடுத்து பரிசோதித்து விட்டு எண்ணெய் படலம் இல்லை என கூறுகின்றது என குற்றச்சாட்டியுள்ளனர்.
இன்றும் தமது வீட்டு கிணற்று நீரை பாத்திரத்தில் எடுத்து பார்க்கும் போது எண்ணெய் படலம் மிதந்கின்றது..கையில் எடுத்து பார்க்கும் போது ஈயப்படலாம் தெரிகின்றது எனவும்  கூறுகின்ற சுன்னாக மின் நிலையத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலத்தடி நீரில் எண்ணெய் படலம் இல்லை என கூறுபவர்கள்,  நிலத்தடி நீரில் எண்ணெய் படலம் கலந்து இருக்கும் சுன்னாகம் மயிலணி,  ஏழாலை ஆகிய பகுதிகளுக்கு வாருங்கள், வந்து எம்முடன் எமது வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து எமது வீட்டு கிணற்று நீரினை அருந்துங்கள் பார்ப்போம் என சவால் விடுத்துள்ளனர்.
முன்னதாக சுன்னாக மின் நிலையத்திற்கு அருகில் உள்ள வீட்டு கிணறுகளில் எண்ணெய் படலம் மிதக்க தொடங்கின. 2011 ம் ஆண்டு முதல் அயல் கிணறுகளில் எண்ணெய் படலத்தின் பரவல் காணப்பட  ஆரம்பித்தன.
அதனை தொடர்ந்து கிணறுகளில் எண்ணெய் படலம் கலக்கும் தன்மை தீவிரமடைய தொடங்கின. சுன்னாகம் பகுதியில் காணப்பட்ட பாதிப்பு இணுவில் , ஏழாலை , மல்லாகம் , தெல்லிப்பளை , கட்டுவான் , அளவெட்டி , இளவாலை ஆகிய பிரதேச கிணறுகளுக்கும் பரவியது.
அதன் பின்னரே அதன் பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியது.அதனை தொடர்ந்து நோர்தோன் பவர் நிறுவனத்திற்கு எதிராக மல்லாக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை தொடர்ந்து அக் காலபகுதியில் மல்லாக நீதவான் நீதிமன்ற நீதிபதியாக  கடமையாற்றிய எஸ்.சதிஸ்கரனால் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 27ம் திகதி நோர்தோன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
அதையடுத்து வடமாகாண சபை நிலத்தடி நீரில் எண்ணெய் படலம் காணபடுகின்றது, என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்ள கிணற்று நீரினை பரிசோதிக்க என நிபுணர் குழு ஒன்றினை உருவாக்கியது.
அக் குழு கடந்த டிசம்பர் மாதம் 7ம் திகதி தனது அறிக்கையை  வெளியிட்டது.அதில் தம்மால் பெறப்பட்ட நீர் மாதிரிகள் மண் மாதிரிகளை ஆய்வுக்கு  உட்படுத்திய போது அவற்றில் நஞ்சு தன்மையோ , பராலோகங்களோ , எண்ணெய் தன்மையோ இல்லை ஆனால் நீரில் மலக்கழிவு கிருமிகளின் தொற்றும் நைத்திரேறின் பாதிப்பும் அதிகளவாக கண்டறியப்பட்டு உள்ளது. எமது ஆய்வில் நீரில் நச்சுக்கள் இல்லை என கண்டறிந்துள்ளோம் அதேவேளை நீரில் மலக்கிருமிகளின் தொற்றும் நைத்திரேறின் பாதிப்பு உள்ளது. என ஆய்வுக்குழு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com