சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழில் தேசிய கீதம்

இலங்கையில் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடக்கவுள்ள, சுதந்திர தின வைபவத்தின் போது தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடவேண்டும் என்று அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைச்சரவை துணைக்குழுவினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com