சுதந்திர தினம் – சம்பந்தர், பங்கேற்பு – சிறிதரன் எதிர்ப்பு போராட்டம்

கொழும்பில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன்கலந்துகொண்டுடிருந்த நிலையில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தினால் கிளிநொச்சி கந்தசாமி கோவிக்கு அருகில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டு சுதந்திர தினத்திற்கான தனது எதிர்ப்பினை வெளியிட்டிருக்கிறார்.

காலை 09.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

அங்கு உரையாற்றிய சிறிதரன் எம்.பி இலங்கையின் சுதந்திர தினமானது தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினமாகவே பார்க்கப்படுகின்றது என்று  தெரிவித்தார். 

இலங்கைத் தீவில் சமாதானம் இருப்பது போன்று தென்பட்டாலும் மனத்தாலும் மக்களின் செயற்பாடுகளாலும் இரண்டுபட்டே காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார். 

இதேவேளை இலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று காணமால் போனவர்களின் குடும்ப உறவுகள் பல்sritharanவேறு பகுதிகளிலும் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 

கறுப்பு நிற துணிகளால் தமது வாய்களை கட்டியபடி வவுனியா நகர சபைக்கு முன்னாள் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 

போரின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகள் எங்கே என்று எழுதப்பட்ட பதாகைகளை இவர்கள் ஏந்தியிருந்தனர். 

அத்துடன் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கவும் இவர்கள் வலியுறுத்தி இருந்தனர். 

இதேவேளை மட்டக்களப்பிலும் காணமால் போன குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 

இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் லயன் ஏ. செல்வேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உருப்பினர் பா.அரியநேந்திரன், காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com