சுதந்திர தினத்தில் புலிக்கொடியா ஏற்றுவது ? – ரணில் கேள்வி

சுதந்திர தினத்தின் போது நாட்டின் தேசியக் கொடியை ஏற்றவேண்டாம் என விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர், கொழும்பிலுள்ள தேசியத் தலைவர் ஒருவர் கூறியதை தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் விடுதலைப் புலிகளின் கொடியையா ஏற்றுவது எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இடையில் புரிந்துணர்வு அரசியல் ஒப்பந்தம் இன்று அலரி மாளிகையில் நடந்தபோது, குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின் தேசிய கொடியை ஏற்ற வேண்டாம் என கூறிய முதலாவது நபர், குறித்த தேசிய தலைவர் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடைபெறவிருக்கும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதும்இ கலந்து கொள்ளாமையும் அவரவர் சுயவிருப்பம் எனவும் அதனை தாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds