சுதந்திர தினத்தன்று கைவிலங்கிட்டு கறுப்புக் கொடிப்போராட்டம் – மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு

சுதந்திர தினத்தன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக கை விலங்கிட்டு கறுப்புப் பட்டிப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்மக்களிற்கு விடியாத அறுபத்து ஒன்பது.
கைவிலங்கிட்டு கறுப்புக் கொடிப்போராட்டம்.
04/02/2017 சனிக்கிழமை
மன்னார் மாவட்டச் செயலகம் முன்பாக.
காலை. 8.30 மணிக்கு
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை தமிழ்மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள்.
ஆட்சிமாற்றத்திற்கு பின்னும் தமிழ்மக்களிற்கு எந்தவிதமான வாழ்வியல் பிரச்சினைகளும் தீர்வதாக இல்லை.
காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை, மனிதவுரிமைகள் விவகாரம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலவிடுவிப்பு புதிய அரசியலமைபு உருவாக்கத்தில் பின்னடைவு என தமிழ்மக்கள் நசுக்கப்படுகின்றனர்.
ஆகவே இவற்றுக்கு எதிராக தமிழ்மக்கள் வடகிழக்கில் சுதந்திர தினத்தன்று அந்த அந்த மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள் கறுப்புக் கொடிபோராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
எனவே மன்னார் மாவட்டத்தில்
மாவட்டச்செயலகத்திற்கு முன்பாக
04/02/2017 சனிக்கிழமை காலை 8.30
மணிக்கு.
கைவிலங்கிட்டு கறுப்புக்கொடிப் போராட்டம் நடாத்தப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வி.எஸ் . சிவகரன்
தலைவர்
பொது அமைப்புக்களின் ஒன்றியம்
மன்னார் மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com