சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் சம்பந்தன் கலந்துகொள்ளாமை வினோதமாயிருக்கிறது – பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம

சுதந்திரம் கொண்டாடும் அளவில் உண்மையான சுதந்திரம் நாட்டினுள் இல்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம எனினும் சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் கலந்து கொள்ளாமை வினோதமான விடயம் என  தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் கலந்து கொள்ளவில்லை என சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளநிலையில் அது குறித்துக் கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற 69வது தேசிய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் எதிர்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com