சுட்டுக்கொல்லப்பட்டவரின் வீட்டுக்கு அடிக்கல் நாட்ட யாழ் வந்த சுவாமிநாதன்!

பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான விஜயகுமார் சுலக்சனின் குடும்பத்தினருக்கு கட்டிக்கொடுக்கப்படவுள்ள வீட்டிற்கு அடிக்கல் நாட்டுவதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று(22) யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 21ஆம் நாள் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இப்படுகொலையைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பைப் புறக்கணிப்புச் செய்தனர். இதன்போது பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்த புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், குறித்த படுகொலைச் சம்பவம்தொடர்பாக நீதியான விசாரணை முன்னெடுக்கப்படுமெனவும், குறித்த மாணவர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இந்நிலையில், யாழ். கந்தரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்சனுக்கு அரசாங்கத்தினால் காணி கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன், அக்காணியில் வீடு அமைத்துக் கொடுப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழாநடைபெறவுள்ளது.

இதற்கானஅடிக்கல் நாட்டு விழா இன்று மதியம் நடைபெறவுள்ளது. இவ்வீட்டினை இராணுவத்தினரே அமைத்துக்கொடுக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com