சற்று முன்
Home / செய்திகள் / சுகாதார தொண்டர் நியமன நிகழ்வு ஏன் பிற்போடப்பட்டது!

சுகாதார தொண்டர் நியமன நிகழ்வு ஏன் பிற்போடப்பட்டது!

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இன்று (05) காலை வடமாகாண சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேருக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் சில முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நிமித்தம் பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுனர் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்-

நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள் இன்று (05) காலை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அனைவரது புள்ளிவிபரங்களும் அடங்கிய பட்டியல் குறித்த பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அமைச்சினால் வழங்கப்பட்ட கட்டமைப்புக்கு எதிராக அல்லது தவறான நியமனங்கள் வழங்கப்பட்டிருக்குமாயின் அதற்கான பட்டியலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்குறித்த பட்டியலை வடமாகாண சபையின் https://np.gov.lk/marks-details-of-health-volunteers-and-e…/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பட்டியலின் மூலம் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்றுக்கொண்டுள்ள புள்ளிகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com