சுகாதார அமைச்சின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்

சுகாதார அமைச்சின் இணையத்தளம் நேற்று (03) இரவு 09.00 மணியளவில்  முடக்கப்பட்டது.

அத்துடன் இணையத்தளத்தின் முகப்பில், எம்சீஏ எனும் முஸ்லிம் சைபர் ஆமி என்ற இலட்சினை பொறிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், இதனால் இணையத் தளத்தில் இருந்த தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என, சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதன்படி இந்த விடயம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இலங்கை கனணி அவசர பதிலளிப்புப் பிரிவு ஆகியோரிடம் முறைப்பாடு வழங்க அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, இலங்கை கனணி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கனணி அவசர பதிலளிப்புப் பிரிவின் சிரேஷ்ட பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷன் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

விஷேடமாக இணையத்தளங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காமையே இதுபோன்ற சைபர் தாக்குதல்களுக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com