சற்று முன்
Home / செய்திகள் / சீரற்ற காலநிலை நீடிப்பு – 8 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை நீடிப்பு – 8 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை

கொழும்பு , கம்பஹா, மாத்தளை, கண்டி , பதுளை,குருணாகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கொழும்பு சீதாவக்க பிரதேச செயலக பிரிவும் சுற்றுப்புறங்களும், வெட்டப்பட்ட நிலச்சாய்வுகள் , தடுப்புச்சுவர்கள் நிலவெட்டுச்சாய்வு என்பவற்றிற்கு அருகில் வசிக்கும் பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவ அனர்த்தம் உள்ள இரத்தினபுரி களுத்துறை கேகாலை கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு தற்போது சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு உள்ள பிரதேச மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பளார் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

மேலும் மாத்தளை ரத்தோட்டை உக்குவளை பிரதேச செயலக பிரிவு, கண்டி உடபலாத்த கங்க இஹல கோரளை பிரதேச செயலக பிரிவு ,பதுளை ஹல்துல்ல பிரதேச செயலக பிரிவு , இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொட , இம்புல்பே , ஓப்பநாயக்க , வெலிகபொல கொடக்காவெல பிரதேச செயலக பிரிவு , குருணாகல் மாவட்டத்தில் ரிதீகம , இப்பாகமுவ மாவத்தகம, மல்லவபிட்டிய பிரதேச செயலக பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தில் இறம்புக்கணை ,வறக்காப்பொல பிரதேச செயலக பிரிவுகளும் சுற்றுப்புறங்களிலும் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை தொடருமாயின் விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர ஆயத்தமாக இருக்கவேண்டும் என்றும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com