சீரற்ற காலநிலை தொடர்பில் ஜனாதிபதியிடம் அதிக முறைப்பாடுகள்

210e631275fef2a1bbb1b9e6864cbd21_Lசீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் பாதிக்கப்பட்ட போதிலும் அரச அதிகாரிகளோ அல்லது வேறு எவரது கவனத்துக்கு உள்வாங்கப்படாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையை பாதித்திருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட போதிலும் எந்தவித அரச அதிகாரிகளுக்கும் கவனத்தில் படாத இடங்கள் இருப்பின் அதுபற்றி 1919 தொலைபேசி அழைப்பின் மூலம் ”ஜனாதிபதியிடம் கூறுங்கள்” வேலைத்திட்டத்திற்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதற்கமைய 17 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு பின்னரான 18 மணித்தியாலங்களுக்குள் 1919 தொலைபேசி அழைப்பின் ஊடாக 1200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அவ்வனைத்து முறைப்பாடுகள் பற்றியும் ஜனாதிபதியின் செயலாளரின் நேரடி அறிவுறுத்தலுக்கமைய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தி தேவையான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வெள்ள நிலைமை தனியும் வரை இச்சேவை தொடர்ந்தும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com