சீரற்ற காலநிலை – அனர்த்தம் ஏற்படும் அபாயம் – அவசர இலக்கங்கள் அறிவிப்பு

IMG_4150நாட்டில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை உடனடியாக அறியத்தருமாறும் அவசர அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் கோரியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் மேலதிக பணிப்பாளர், பிரிகேடியர் கே.ஜெ.ஜெயவீரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம்.
இராணுவம்: 0111 2 434 251, 011 3 818 578

கடற்படை: 011 2 212 230, 011 2 445 368, 011 2 212 231

விமானப்படை: 011 2 343 970, 011 2 343 971

ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முப்படைக்கு அறிவிக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

இதே வேளை

நுவரெலியா, கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட பலபொக்குன பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்று காரணமாக மரம் ஒன்று வீடுகளின் மேல் சரிந்து வீழ்ந்ததால் இரு வீடுகளும் ஒரு லொறியும் சேதமடைந்துள்ளது.

இதனால் குறித்தப் பகுதியில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை கொத்மலை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றது.

அனர்த்தம் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொத்மலை பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொலிஸார், கிராம சேவகர் மற்றும் பொது மக்கள் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் சீரற்ற காலநிலையால் கொழும்பில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை பகுதியில் மினி சூறாவளி ஒன்று ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மினி சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதில் யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com