சற்று முன்
Home / செய்திகள் / சீனா மீது விழுந்த விண்கல்லே கொரோனா வைரஸ் உருவாகக் காரணமாம்

சீனா மீது விழுந்த விண்கல்லே கொரோனா வைரஸ் உருவாகக் காரணமாம்

சீனா மீது விழுந்த விண்கல்லே கொரோனா வைரஸ் உருவாகக் காரணம்’ என விண் உயிரியல் மைய பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பக்கிங்ஹாம் விண் உயிரியல் மைய பேராசிரியர் சந்திரா விக்ரமசிங்க இதுபற்றி தெரிவித்திருப்பதாவது:

கடந்த அக்., 11ம் தேதி, சீனாவில் வடக்கு அட்சரேகைப் பகுதியில், வூஹான் அருகே, விண்கல் விழுந்தது. அதன் மூலமே கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது.கொரோனா தொற்று அதிகமாகப் பரவியிருப்பது, சீனாவிலிருந்து, 40 முதல் 60 பாகை வடக்கு அட்சரேகைப் பகுதியில் தான். இதிலிருந்தே விண்கல்லின் பாதிப்பை அறிய முடிகிறது -இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விக்ரமசிங்கவின் இந்த கருத்தை பலரும் மறுத்து வருகின்றனர். குறிப்பாக, நோய்த்தொற்று வல்லுனர்கள், விக்ரமசிங்கவின் கூற்றை முற்றிலும் மறுத்துள்ளதோடு, ‘கோவிட்19 எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ், ஏற்கனவே அறியப்பட்ட வைரஸ்களைப் போன்றது தான். அது, வன விலங்குகளிடம் இருந்தே தோன்றியிருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சீனா மீது விண்கல் விழுந்ததற்கான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ள, விண் உயிரியல் மைய பேராசிரியர் விக்ரமசிங்க, ‘விண்கல் விழுந்த பகுதியில் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தால் தனது கூற்று உண்மை என்பதை அனைவரும் உணருவர்’ எனத் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com