சீனா- இலங்கை நட்புக் குறித்து இந்தியாவில் வைத்து ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை !

14708045_10154465494336327_524429998643533902_o
பிரிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீன ஜனாதிபதி ஷிங் பிங்கைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இருநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட சந்திப்பு நேற்று (16) இரவு இடம்பெற்றது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவுக்கு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வு குறித்து இதன்போது பேசப்பட்டதாகவும் நட்புறவு நாடுகள் என்றவகையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இதன்போது இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக இலங்கை ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன .

14712786_10154465494261327_5507254573295686912_o
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாகவும் சீன – இலங்கை தலைவர்கள் விரிவாக ஆராய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com