சி.எம் ஐ சந்தைக்கு இழுத்த சிவி.கே

திருநெல்வேலி சந்தைக்குச் சென்று அங்குள்ள குறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுததுள்ளார். இன்றைய மாகாணசபை அமர்வில் இதனைக் குறிப்பிட்ட அவர்,
திருநெல்வேலி சந்தைக்கு மழைக்காலத்தில் செல்ல முடியாதுள்ளது. செங்குந்த சந்தை எங்கள் வீட்டுக்கு அருகில் தான் இருக்கிறது. எனக்கு தெரியாமல் முதலமைச்சர் அங்கு வந்து குறைகளை கேட்டறிந்தார் என பத்திரிகை செய்தி மூலம் அறிந்து கொண்டேன். அதே போல திருநெல்வேலி சந்தைக்கும் சென்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரி மழை காலத்திற்கு முன் நடவடிக்கை எடுத்தால் நல்லது என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com