சற்று முன்
Home / செய்திகள் / சிவில் பாதுகாப்புக் குழுக்களில் சமூக விரோதிகள் !!

சிவில் பாதுகாப்புக் குழுக்களில் சமூக விரோதிகள் !!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சிவில் பாதுகாப்பு மீள்உருவாக்க குழுவில் பல சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர்களை உள்வாங்குவதற்காக கிராம சேவகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு குழுவில் உள்வாங்க சிபார்சு செய்யப்பட்டவர்களில் வாகன மோசடி காசோலை மோசடி பழைய இரும்பு திருட்டு செயல் கள்ளமாடு கடத்தல் காணி மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளவர்கள் இடம்பெற்றுள்ளமை அறியக் கிடைத்துள்ளது.

இவ்வாறான சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய நபர்களை சிபர்சு செய்யும் நடவடிக்கையில் பயத்துடனும் மற்றும் அன்பளிப்புக்களுக்காகவும் கிராம சேவகர்கள் உள்ளிட்ட சிலர் சிபார்சு செய்துவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் சிவில் பாதுகாப்பு குழு அடையாள அட்டையை பெற்று மேலும் குறித்த மோசடியாளர்கள் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக குற்றஞ்சுமத்தப்படுகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com