சிவில் உடையில் சிந்திக பண்டார – சிறை அத்தியட்சகருக்கு அழைப்பாணை

வித்தியா கொலை வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் சிந்திக பண்டாரா சிவில் உடையில் வந்திருந்தார். சுன்னாகம் பொலிஸ் நிலைப் பொறுப்பதிகாரியாக இருந்தபோது இளைஞன் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த வழக்கில் சித்திரவதை செய்த குற்றச்சாட்டிற்காக சிந்திக பண்டார அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைத்தண்டனை பெற்றுவருகின்றார். இந்நிலையில் இன்றைய வழங்கிற்கு அவர் சிறைச்சாலை உடையின்றி சிவில் உடையில் வந்திருந்தார். இது தொடர்பில் கடும் விசனம் வெளியிட்டுள்ள ட்ரயல் அட்பார் நீதிமன்று அவர் சிவில் உடையில் வழந்தமை தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com