சற்று முன்
Home / செய்திகள் / சிவரூபன் பற்றி செய்தி வெளியிட்ட ஊடகவியளார் – TID 6 மணித்தியாலங்கள் விசாரணை ..

சிவரூபன் பற்றி செய்தி வெளியிட்ட ஊடகவியளார் – TID 6 மணித்தியாலங்கள் விசாரணை ..

பளை வைத்திய அதிகாரி சிவரூபன் பிரமுகர்களை கொல்ல திட்டமிட்டதாக செய்தி புனைந்த வவுனியாவை சேர்ந்த செய்தியாளர் பயங்கரவாத விசாரணை பிரிவில் சுமார் 6 மணித்தியாலங்கள் உருட்டியெடுக்கப்பட்டு விட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார்.

திவயின சிங்கள பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியிருந்தது. கடந்த மாதம் 29ம் திகதி வெளியான அந்த செய்தியை, வவுனியாவை சேர்ந்த சிரேஷ்ட சிங்கள செய்தியாளர் தினசேன ரத்துகமவே அனுப்பி வைத்திருந்தார்.

அந்த செய்தியால் பெரும் பரபரப்பு நாட்டில் ஏற்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான செய்தியை வெளியிட்டார் என தெரிவித்து, அவரை விசாரணை செய்யும் அனுமதியை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் அழைப்பாணை பெறப்பட்டு கொழும்பு பயங்கரவாதத்தடுப்பு விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டு 6மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அவர் விசாரணை எதிர்கொண்டிருந்தார். பளை வைத்திய அதிகாரி சிவரூபன் கோட்டாபயவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் அவரால் அனுப்பப்பட்ட செய்தி தொடர்பாகவே உருட்டியெடுக்கப்பட்டுள்ளார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com