சிவனொளிபாதமலைக்கு போதைபொருள் கொண்டு செல்வதை தடுக்க மோப்ப நாயின் உதவியுடன் தேடல் – ஒருவர் கைது

சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு போவதை தடுத்து நிறுத்துவதற்காக அட்டன் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் 24.12.2016 அன்று மாலை 3.30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாகலை சந்தயில் உள்ள காவல் அறனில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது ஹெரோயின் போதை பொருள் 40 மில்லிகிராம் வைத்திருந்த நபர் ஒருவர் மஸ்கெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் விசாணையின் பின் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக மஸகெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் யாத்திரிகர்களில் ஒரு சிலர் போதை பொருள்களை சிவனொளிபாதமலைக்கு கொண்டு செல்வதாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்தே இந்த மொப்பநாய்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த ஐம்பதற்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கையில் அட்டன் பொலிஸாரும், மஸ்கெலியா பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com