சிவசேனை அமைப்பு தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதல்ல – தலைமை ஒருங்கிணைப்பாளர் சச்சிதானந்தம்

vakeesam-articalஅரசமரத்தின்கீழ் தியானம் செய்த நாங்கள் இன்று அரச மரத்தைக் காண்டாலே அவற்றைப் பிடுங்கி எறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ள சிவசேனை அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தம் சிவசேனை அமைப்பு தமிழ்த் தேசியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அமைப்பு அல்ல நாங்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களும் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

யாழ் உடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (20)  நடைபெற்ற ஊகட சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

கடந்த நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறுகளை பார்த்தார் சைவர்களாக இருந்தவர்களே தமிழர்களாக இருந்துள்ளார்கள். சைவர்களாக இல்லாதவர்கள் சிங்களவர்களாக மாறிப்போன செய்தி காலி  தொடக்கம் புத்தளம் வரை காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் கிறிஸ்தவ தமிழர்களாக இருந்தவர்கள் அனைவரும் சிங்களவர்களாக மாறிவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கு மாகாணத்தில் உடம்புல எனுமிடத்தில் வாழ்ந்துவரும் தமிழர்கள் சைவர்களாக இருக்கிறார்கள். புத்தளத்திலுள்ள தமிழர்கள் சைவர்களாக உள்ளார்கள். புத்தளத்தில் கிறிஸ்தவர்களாக மாறிய தமிழர்கள் தற்போது சிங்களவர்களா மாறிவிட்டார்கள். நீர்கொழும்பில் இரண்டுவகையான சிங்ளவர்கள் இருக்கிறார்கள், ஒன்று தமிழ் பேசும் சிங்களவர்கள் மற்றையது சிங்களம் பேசும் தமிழர்கள்.

வடமேற்கு மாகாணம் முழுமையாக தமிழர்கள் வாழ்ந்த பிரதேசம் 1921 ஆம் ஆண்டு அந்த மாகாணத்திற்கு தமிழர் ஒருவர் பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்று இலங்கை தேசிய காங்கிரஸ் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பெரும்பான்மையான தமிழர்கள் இருந்த வடமேற்கு மாகாணம் இன்று எமது கையில் இல்லை. தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் இதனை யோசித்துப் பார்க்க வேண்டும்.

சைவர்களிற்கு என்று யார் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களிற்கு ஆதரவாக பெரிய அமைப்புக்கள் இருக்கிறன. கிறிஸ்தவர்களிற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமைப்புக்கள் உள்ளன. பொத்தர்களை அரசே பார்த்துக்கொள்கிறது உதவிகளை வாரி வழங்குகின்றது. சைவர்கள் என்ன செய்வார்கள். அவர்களிற்கு ஏற்படும் பிரச்சினைகளிற்கு யார் தீர்வு பெற்றுக்கொடுப்பது.

திரக்கேதீஸ்வரத்த்தில் பாலாவி தீர்த்தத்திற்கு கிழக்குக் கரையில் பெரிய தேவாலயம் கட்டப்படுகின்றது. அப்பிரதேசத்தில் புத்தகோவில் கட்டப்பட்டுவிட்டது. அவர்கள் நாங்கள் மடு தேவாலயம் அருகில் இந்துக் கோவில் கட்ட விடுவார்களா?

மற்றவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாகவும், உண்மையாக பௌத்தர்களாகவும், உண்மையாக இஸ்லாமியர்களாகவும் இருப்பதை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் அவர்கள் எங்களை உண்மையான இந்துக்களாக இருக்க விடுவதில்லை.

நாங்கள் மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டுவருமாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் சிலவும் எமக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

சைவத்தை வலுப்படுத்தும் முதல்கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் கார்த்திகை விளக்கீட்டு தினத்தில் மன்னார் சுந்தரர் ஆதீனம் எனும் அமைப்பினை தொடங்கவுள்ளதாகவும் ஆதீனத்திற்கு குருதீட்சை வழங்கி அபிஷேகம் செய்யும் நிகழ்வில் தமிழ்நாட்டின் ஆதீனத்தைச் சேர்ந்தவர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் படிப்படியாக மாவட்டம் தோறும் அதீனங்கள் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com