சிறையிலிருந்து சிங்களச் சகோதரனுக்கு – நூல் வெளியீட்டு அழைப்பு

சமூக நேசரும் தமிழ் அரசியல் கைதியுமான விவேகானந்தனூர் சதீஸின் “சிறையில் இருந்து சிங்களச் சகோதரனுக்கு…!” கவிதை நூல் வெளியீடும், “விடியலைத் தேடும் இரவுகள்” கவிதை நூல் அறிமுக நிகழ்வும் யாழ்ப்பாணம் நீராவியடியில் உள்ள இலங்கைவேந்தன் கலைக் கல்லூரியில் எழுகலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் வரவேற்பு உரையினை சமூக ஆர்வலர் கொட்டடிக் கோமகன் நிகழ்த்த நூல் வெளியீட்டு உரை, ஆய்வுரை மற்றும் கருத்துரைகளை இலக்கியப் படைப்பாளிகளான கை. சரவணன், அஜந்தகுமார், சித்தாந்தன், மயூரரூபன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் முதன்மை மற்றும் சிறப்புப் பிரதிகளை நூலாசிரியரின் தாயாரான திருமதி செ.மகேஸ்வரி வெளியீட்டு வழங்க யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, படைப்பாளிகள் உலகம் அமைப்பின் நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதன் ஆகியோர் பெற்றுக்கொள்வர்.

நிறைவாக நன்றியுரையை நூலாசிரியரின் புதல்வியான செல்வி. காவியா சதீஸ்குமார் நிகழ்த்துவார்.
இந்நிகழ்வில் படைப்பாளிகள், இலக்கியப் பிரியர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com