சற்று முன்
Home / செய்திகள் / சிறுவர்களுக்கு அஸ்மின் சொன்ன ”காக்காவின்” கதை

சிறுவர்களுக்கு அஸ்மின் சொன்ன ”காக்காவின்” கதை

இன்றைய சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும் முகமாக யாழ்ப்பாணம் கோண்டாவில் சி.சி.த.க பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

அதன்போது சிறுவர்களுக்கு முன்னிலையில் பிரதம உரை நிகழ்த்துமாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள் அழைக்கப்பட்டபோது அவர் அங்கிருந்த மாணவர்களுக்கு முன்னால் ஒரு கதை சொன்னார். அவர் சொன்ன கதை அங்கிருந்த ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட மாணவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கதை சொல்தல் என்பது எல்லோருக்கும் விருப்பமான ஒரு விடயமே. அதுவும் சிறுவர்களுக்கு மிக மிக விருப்பமான ஒன்றாகும். நமக்கு நீதிக் கதைகள் என்று ஒரு சில நீதிக் கதைகள் சொல்வார்கள்இ அவற்றிலே நீதி எங்கே இருக்கின்றது எனப் பலசந்தர்ப்பங்களில் நாம் தேடியதுண்டு, அவ்வாறான ஒரு கதைதான் “பாட்டி வடை சுட்ட கதை” இக்கதையை நாம் எல்லோரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லக் கேட்டிருக்கின்றோம், அதில் என்ன நீதி இருக்கின்றது என்றும் தேடியிருக்கின்றோம். பாட்டி வடை சுட்டது, காகம் வடையைத் தூக்கிச் சென்றது, காகத்திடமிருந்து வடையை நரி பறித்தது எனப் பல விடயங்கள் அதிலே சொல்லப்படும். எங்களுக்கு வந்த கேள்வி என்னவென்றால் இங்கே எது நீதி என்பதுதான். ஆனால் இதே கதையை சீனாவிலே வேறுவிதமாகச் சொல்லியிருக்கின்றார்கள் என்று ஒரு காணொளியில் பார்த்தேன். அவர்கள் இந்தக் கதையை இப்படிச் சொல்கின்றார்கள்

காகம் பாட்டியிடம் வடை கேட்டது, பாட்டியோ சுள்ளிகளைப் பொறுக்கிவரப் பணித்தார், காகம் வடைக்காக உழைத்தது. காகத்தின் உழைப்பின் ஊழியமாக வடையைப் பாட்டி கொடுத்தார். வடையை பெற்ற காகம் ஒரு மரத்தில் ஒய்யாரமாக இருந்து புசிக்க ஆரம்பித்தது, அப்போது நரி தனது தந்திரத்தின் மூலம் வடையைப் பறிக்க முயற்சித்தது, போலியான கவர்ச்சிவார்த்தைகளின் மூலம் காகத்தை மெய்மறக்கச் செய்தது, காகம் போலியான புகழ்ச்சிக்கு மயங்கியதுஇ வடை பறிபோனது; அதனோடு கதை நின்றுவிடவில்லை, காகம் எல்லாக் காக்கைகளையும் அழைத்தது தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க முனைந்தது, நரி தமது உழைப்பை அபகரித்தது என்று குற்றம் சாட்டியது, நரிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. என்று கதை முடிகின்றது. உழைப்பிற்கே ஊதியம்; இனாமாக எதுவும் கிடைக்காது, வஞ்சப் புகழ்ச்சிக்கு அடிமையாகாதீர்கள் அது உங்களுக்கு இழப்புக்களையேற்படுத்தும், உழைப்பை ஒருபோதும் பிறர் சுரண்டிச் செல்ல அனுமதிக்காதீர்கள், உங்கள் உழைப்பு உங்கள் உயர்வுக்கே போன்ற நீதிகள் இந்தக் கதையிலே நிறைந்திருக்கின்றன.
இப்படியான கதைகளே எமது சிறார்களுக்கு இன்று அவசியப்படுகின்றன என்று தனது கதையை நிறைவு செய்தார் வடக்கு மாகாணசபை உறுப்பினர்

மேற்படி நிகழ்வில் வடக்குமாகாணசபை உறுப்பனர் அய்யூப் அஸ்மின் அவர்களுடைய 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 21 000 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com