சிறுவன் கடத்தல் முயற்சியா? – செல்வச்சந்திதியில் நேற்று பரபரப்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயவளாகத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நேற்று  (11-11-2017) சனிக்கிழமை மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றது.

 

நேற்று  மாலை  செல்வச்சந்நிதியானை தரிசனம் செய்ய பக்தர்கள் வழமை போல வருகை தந்திருந்தனர். செல்வச்சந்நிதி முருகன் ஆலயவளாகத்தில் வயது (12)  மதிக்க தக்க சிறுவன்  கையில் விளாங்காய் பையுடன் காணப்பட்டுள்ளான். ஜேர்மனியிலிருந்து  வந்திருந்த குடும்பத்தை சேர்ந்தவர்களிடம்  இச்சிறுவன் விளாங்காய் வாங்குமாறு  கேட்டுள்ளான். இச் சிறுவனை கண்ட  குடும்பத்தை சேர்ந்தவர்கள் இச்சிறுவனை அழைத்து வினாவி சிறுவனுக்கு சிறிது பணத்தையும்  வழங்கியுள்ளனர்.

இதனை அவதானித்த பக்தர்கள் ஆலய மடத்தில் தங்கி வசிப்பவர்கள் இதனை அவதானித்த வன்னம் இருந்துள்ளார்கள்.  வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உனக்கு என்ன கூறினார்கள் என்று கேட்டுள்ளார்கள்  அதற்கு சிறுவன் ஒன்றுமில்லை . கூட்டிச்சென்று வீட்டுக்கு அருகாமையில் என்னை  விடும் படி  கேட்டதாக தெரிவித்தான். ஆலய வளாகத்தில் நின்றவர்களில்  ஒருவர்  சிறுவனை கடுமையாக தாக்கினார். ஏன் பொய் சொல்லுகிறாய் இவர்களுடன் எங்கே செல்ல போகிறாய் உனக்கு யார் இவர்கள் உனக்கு தெரியுமா என கண்டித்ததோடு சிறுவனை அவர்களுடன் செல்ல விடாது தடுத்து வைத்திருந்தனர்.  அப்போது சிறுவன் தன்னை அவர்களுடன் போக அனுமதியுங்கள் என கதறினான்.

மேலும் குறித்த சிறுவன் விடயத்தில்  தெரியவருவது

குறித்த சிறுவன் வயது 12   வடமராட்சி கெரடாவில் பகுதியைச்சேர்ந்தவர். எனவும்  சிறுவனின் தந்தை இறந்துள்ள நிலையில் தாயின் அரவனைப்பில் வளர்ந்து வருகின்றார்.  இரண்டு சகோதரர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.   சிறுவன் நேற்று காலையிலிருந்து  மாலை வரை சந்நிதி வளாகத்தில் காணப்பட்டதாகவும் குறித்த சிறுவனைத்தேடி யாரும் வரவில்லை என ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் ஆச்சிரமத்தை சேர்ந்தவர்கள்  தெரிவித்தனர்.

ஜேர்மனியிலிருந்து  (250-6361)  என்ற இலக்கத்தை கொண்ட   வேனில்  ஆலயத்திற்கு வருகை தந்திருந்த குடும்பத்தை சம்பவம் தொடர்பாக செய்தியாளர் வினாவிய போது சிறுவன் தம்மிடம் விளாங்காய் வாங்குமாறு கேட்டதாகவும்  அதற்கு தாங்கள் சும்மா கதைத்துவிட்டு சிறிது பணத்தை கொடுத்ததாகவும் சிறுவன் தன்னை வீட்டுக்கு அருகாமையில்  இறக்கி விடும்படி கேட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆலயத்தொண்டர்கள் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்

ஆலயத்தில் காணப்பட்ட சிறுவனை ஜேர்மனியிலிருந்து வந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்  பணமும் மூன்று நேர உணவும் தருகிறோம் எங்களுடன் வாரியா என கேட்டதாகவும் ஆசை வார்த்தை காட்டியதால்  சிறுவன் அவர்களுடன் செல்ல உடன் பட்டதாகவும் சிறுவனை கூட்டிச்சென்று அவனுக்கு ஏதும் நடந்தாலும் தெரியாது சிறுவனை பணம் படைத்தவர்கள் தவறாக பயன் படுத்தி விடுவார்கள்.  சுவிஸ் நாட்டிலிருந்து வந்த சுவிஸ்குமார் பாடசாலை மாணவி வித்தியாவை படுகொலை செய்தமை யாவரும் அறிந்ததே  யாழில் தற்போது  சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகமாக நடைபெறுவதனால்  சிறுவனை கூட்டிச்செல்ல  அனுமதிக்க மாட்டோம்.   ஆலயகுருக்கள் ஐயாவை அழைத்து  சிறுவனை அவரின் குடும்பதாரிடம் அழைத்து சென்று விடுகிறோம் என தெரிவித்திருந்தனர்.

ஆலய குருக்கள் உதவியுடன்  சிறுவனின் இல்லத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com