சிறுபான்மை அங்கத்துவத்தை பெருக்கிக்கொள்ள மேலும் 5 தேர்தல் தொகுதிகள் அவசியமாகின்றது

img_4377
நுவரெலியா மாவட்டத்தில் 5 தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றது. தமிழர் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றம் மற்றும் ஏனைய சபைகளுக்கு அதிக உறுப்பினர்களை உள்வாங்கக்கூடிய நிலையில் சிறுபான்மை அங்கத்துவத்தை பெருக்கிக்கொள்ள மேலும் 5 தேர்தல் தொகுதிகள் அவசியமாகின்றது எனமலையகத்திற்கான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜேசந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கான மலையக அமைப்புகளின் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இதில் அரசியல் சார்பற்ற நிலையில் முக்கியஸ்தர்களாக எம்.திலகராஜ், திரு.எந்தனி லோறன்ஸ், மற்றும் பெப்ரல் கண்காணிப்பு குழு சார்பாக அதிகாரிகள், மலையக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கேகாலை, களுத்துரை, இரத்தினபுரி, பதுளை போன்ற மாவட்டங்களில் தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ளும் முகமாக விகிதாசார முறை தேர்தல் முறையில் பட்டியல் தயாரிக்கும் பொழுது சிறுபான்மை உறுப்பினர்களுக்கான இடத்தினை பட்டியல் இட வேண்டும்.

இது தொடர்பாக அரசியல் அமைப்பு வழிகாட்டல் குழுவுக்கும், பெப்பரல் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் ஒரு வார காலப்பகுதியில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.

சிறந்த தேர்தல் முறை ஒன்றினை அரசாங்கம் முன்னெடுக்கும் பொழுது விகிதாசார அடிப்படையில் பிரதிநிதிகளை உள்வாங்கும் நிலை ஏற்படுமாயின் சிறுபான்மை இனத்தவருக்கு இந்த விகிதாசார முறையின்படி அதிகமான உறுப்பினர்களை உள்வாங்கும் நிலையை உருவாக்க வேண்டும்.img_4380

பெரும்பான்மையான மக்கள் பகுதியில் வாழும் சிறுபான்மை இன மக்களின் பிரதிநிதிகளை தேர்தல் முறைபடி சபைகளுக்கு உள்வாங்கிக் கொள்ளும் நிலை தொடர்பில் மேலும் பொது மக்கள் அரசியல் தலைமைகள், பொது அமைப்புகள் ஊடாக ஆராய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

விகிதாசார அடிப்படையில் தேசியமட்ட எல்லை நிர்ணய நடவடிக்கைகள் சாத்தியமற்றதாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் மீள் நிர்ணயம் செய்தல் தொடர்பில் அதித கவனத்தை கொள்ளல் அவசியமாக காணப்படுகின்றது.

நடைபெறவுள்ள தேர்தல்களில் சிறுபான்மை இனத்தவரின் குறிப்பாக மலையக சிறுபான்மை இன தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை அதிகரிக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் மலையகத்தில் 16 தமிழ் பிரதிநிதித்துவம் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இன்றைய பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் அடங்கும் தேர்தல் சட்டத்தில் 16 உறுப்பினர்கள் மலையக உறுப்பினர்களாக அமைய வேண்டும்.

இத் தொகை 240 ஆக உயரும் பொழுது மலையகம் சார்பில் 18 உறுப்பினர்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

ஆகவே 10 தேர்தல் தொகுதிகள் மாவட்ட மட்டமின்றி மாகாண ரீதியில் விகிதாசார முறையில் தெரிவு செய்யும் பொழுது உள்வாங்கப்படல் காலத்தின் தேவையாக அமைகின்றது.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் பொது மக்களுக்கு உறுதியான நிலைப்பாட்டினை கொண்டு வர அரசியல் சக்திகளை பெறுவதில் தொடர்பிலும் பாராளுமன்ற ஒழுக்கை நடவடிக்கைகளும் அதற்கான தீர்வுகளும் தொடர்பிலும் விரைவில் ஆலோசனைகளுக்கு கொண்டு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com