பொலிஸாரின்  துப்பாக்கிச் சூட்டில் இறந்த இளைஞனின் இறுதி நிகழ்வுகள் அமைதியாக நடந்தது!

 

பொலிஸாரின்  துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய கரவெட்டி துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று(11)  இடம்பெற்றுள்ள நிலையினில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களிற்கு ஊர்பொதுமக்களால் நிகழ்வினில் பங்கெடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்று மாலை அங்கு வருகை தந்திருந்த உயிரிழந்த இளைஞனின் கிராமத்தை சேர்ந்த தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினரான சிவயோகன் இளைஞர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அங்கு அஞ்சலி செலுத்த சென்ற மற்றொரு மாகாணசபை உறுப்பினரான கே.சிவாஜிலிங்கத்துடன் உரையாடிய இளைஞர்கள் தமது குறித்த தடைபற்றி அறியத்தந்ததுடன் அவரை உயிரிழந்த இளைஞனின் வீட்டிற்கு செல்ல அனுமதித்துமிருந்தனர்.

இன்றைய தினம் கே.சிவாஜிலிங்கமும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி செயலாளா செல்வராசா கஜேந்திரனும் மட்டும் இறுதி அஞ்சலி நிகழ்வினில் பங்கெடுக்க மக்கள் அனுமதித்திருந்தனர்.அவர்களும் இறுதி ஊர்வலத்தினில் பங்கெடுத்திருந்தனர்.

இதனிடையே நெல்லியடி முதல் கொடிகாமம் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும் இறுதிக்கிரியை நேரம் மற்றும் இறுதி ஊர்வலத்தின் போது அங்கு அமைதி நீடித்தது.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com