சற்று முன்
Home / செய்திகள் / சிறிலங்கா சுதந்திரக்கட்சி முடிவு …வேறொரு முடிவை எடுப்பேன் என குமார வெல்கம

சிறிலங்கா சுதந்திரக்கட்சி முடிவு …வேறொரு முடிவை எடுப்பேன் என குமார வெல்கம

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க சிறிலங்கா சுதந்திரக்கட்சி முடிவு செய்தால், தான் வேறொரு முடிவை எடுப்பேன் என அதிரடியாக அறிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.

சுதந்திரக்கட்சியின் மத்திய குழு நாளை கூடி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயதிஸ்ஸ ரணவீர இன்று கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கைத்தறி, நீர்ப்பாசன அமைச்சராகவும், மகாவலி அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் பணியாற்றினார்.

இரத்தினபுரியிலுள்ள அவரது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.

2015 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com