பிறக்கவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் அலையாக திரண்டு தமக்குத் தேவையான உடைகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்யவும், பல்வேறு தேவைகளுக்காகவும் நகரங்களுக்கு செல்ல அவர்களுக்கு தடையற்ற பாதுகாப்பான போக்குவரத்து சேவையினை முறையாக வழங்குமாறு வடக்கு மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் பேரூந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் அனைவருக்கும் அறிவுறுத்துவதோடு,
இவ்விடுமுறை நாட்களை மக்கள் சந்தோஷமாக அனுபவிக்க, சன நெருக்கம் உள்ள இடங்களிலும் ஏனைய வீதிகளிலும் வாகனங்களை செலுத்தும் சகல சாரதிகளும் மிகவும் கவனமாகவும் வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்தும் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை தடுக்குமாறும், மது போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மேல் எந்த வித பாரபட்சமும் இன்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வீதிப் போக்குவரத்துப் பொலிசாரை கேட்டுக்கொள்வதாகவும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்…