சிரியா அகதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் – அமெரிக்க அதிபர் வேட்பாளர் அச்சம்

அமெரிக்கா: அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள சிரியா அகதிகள் ஐ.எஸ் தீவிரவாதிகளாக இருப்பார்களோ என தான் அஞ்சுவதாக அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நியூடோனால்டு ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016-ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனரான நியூடோனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். 

பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்காவின்  ஹாம்ப்ஷைர் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,  சிரியாவிலிருந்து தஞ்சம்புக மற்ற நாடுகளுக்குள் நுழைந்துள்ள 2 லட்சம் பேரும், ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருக்கலாம் என தான் நம்புவதாக கூறினார். 
மேலும் சிரியாவிலிருந்து அகதிகளாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள், தான் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டால் திரும்பிப்போவார்கள் என்றும், ஏனெனில், அவர்கள் அனைவரும், ஐ.எஸ். படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும்,  உலகின் மிக மோசமான தந்திரமாக அவர்கள் நாட்டிற்குள் நுழைந்திருப்பதாக தான் அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் சிரியாவுக்குள் நுழைந்துள்ள ரஷ்யப் படையிரை தான் ஆதரிப்பதாகவும் டோனால்டு தெரிவித்தார்.

ரஷ்யப் படை ஐ.எஸ். தீவிரவாதிகளைத் தாக்குவதற்கு பதிலாக, சிரியா மக்கள் வசிக்கும் பகுதிகளை வான்படை மூலம் தாக்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை கூறியுள்ள வேளையில்,  அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனால்டு ட்ரம்ப்பின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds