சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் – மெகா கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு

சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா என மிகப்பெரிய கூட்டணியுடன் பிரமாண்டமான முறையில் ஒரு படம் உருவாக இருக்கிறது.

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளையொட்டி அவர் நடிக்கவிருக்கும் 151-வது படத்தின் டைட்டில் மற்றும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள் குறித்தும் அதிகாரபூர்வ தகவல்கள் நேற்று வெளியானது.
சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘சை ரா நரசிம்ஹா ரெட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் சரித்திர கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா, நாசர், ரவி கிஷன், முகேஷ் ரிஷி, ரகுபாபு, பர்சூரி வெங்கடேஸ்வரராவ், சுப்பராஜ், ஜெயபிரகாஷ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டளாமே நடிக்கவிருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் சிரஞ்சீவி மற்றும் விஜய்சேதுபதி ஆகியோருடன் முதன் முதலாக கை கோர்க்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். புரொடக்‌ஷன் டிசைனராக ராஜீவன் பணியாற்றுகிறார். இந்த படம் தெலுங்கு தவிர மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com