சித்திரவதை வழங்கு – பொலிஸ் அதிகாரி உட்பட 6 பொலிசாருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில்தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர் மர்மான முறையில் சாவடைந்தமை தொடர்பான வழக்கில், குற்றம்சாட்ட 8 பொலிஸாரில் 6 பொலிஸார் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் 6 பேருக்கும், தலா 10 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை, 2 லட்சம் ரூபா நட்டஈடு, 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இருவர் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சுமணன் என்ற இளைஞன் மர்மான முறையில் சடலமாக குளத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தான். பொலிஸ் தடுப்புக் காவலில், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டாரவினால் அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

வழக்கின் தொகுப்புரையில் அரச சட்டத்தரணி, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமணன், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அங்கே சாவடைந்துள்ளார். அதன் பின்னர் அவரை, அடையாளம் காண்பிப்பதற்காக வட்டக்கச்சிக்கு கொண்டு சென்றமை, அதன் போது பொலிஸ் காவலில் இருந்து அவர் தப்பிக்க முயன்றதாகச் சொல்லப்பட்டமை எல்லாம் சோடிக்கப்பட்டவை என்று குறிப்பிட்டார்.

இதன் பின்னர் சந்தேக நபர்களான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்கு அரசியல் நோக்கோடு தொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் தொகுப்புரைகள் சில மணி நேரத்துக்கு முன்னர் முடிவடைந்திருந்தது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கினார்.

குற்றம்சாட்ட 8 பொலிஸாரில் 2 பேரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அப்போதைய பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார உள்ளிட்ட 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். ஒவ்வொருவருக்கும் தலா 10 கடூழியச் சிறைத் தண்டனை விதித்தார். அத்துடன் ஒவ்வொருவரும் 2 லட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும், 25 ஆயிரம் ரூபா தண்டமும் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com