சிங்க லே – தெற்கில் உருப்பெருக்கும் பேரினவாதமா?

சிங்க லே என்பது தங்களுடைய அமைப்பு முன் வைத்த சிந்தனை என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா  தற்போது இதைக் குறித்த பிரசாங்களை முன்னெடுப்பவர்கள் குறித்து தமது அமைப்புக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளது. 
தமது அமைப்பு 2014 செப்டம்பர் 28 நடத்திய கூட்டத்தில் சிங்க லே குறித்து  பேசியதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பின் நிறைவேற்று தலைவர்  டிலந்த விதானகே அதற்கு முன்னதாக எவரும் இது குறித்துப் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த விடயம் விஞ்ஞான ரீதியான வரலாற்று ரீதியான அடிப்படை வாதம் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா 1815இல் மேல் நாட்டு உடன்படிக்கை ஒன்றில் இலங்கை சிங்க லே என்று அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தன்னுடைய வாதத்தை தெரிவித்துள்ளது. 
இது இனவாத நடவடிக்கையல்ல என்று தெரிவித்துள்ள அந்த அமைப்பு இலங்கையை வரலாற்று அடிப்படையில் விஞ்ஞான அடி்பபடையில் சிங்க லே என்றும் அனைத்து இனத்தவரையும் சிங்க லே என்று அழைக்குமாறும் தாம் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை சிங்க லே எனப் பொறிக்கப்பட்ட ஸ்ரிக்கர்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் பேரினவாத சக்திகள் இருப்பதாக கொழும்பு ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

சிங்கள இனப்பற்றுள்ள வர்த்தக நிலையங்கள், மற்றும் வாகனங்களில் இந்த ஸ்ரிக்கர்களை ஒட்டவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாகவும் ஊடகங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

குறித்த இலட்சினை பொறிக்கப்பட்ட ரீசேர்ட்டுக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சிங்கள மக்களை கவரும் வடிவத்திலும் வர்ணத்திலும் அச்சடிக்கப்பட்ட இந்தப் பொருட்கள் பாதை ஓரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

சிங்க லே என்று பொறிக்கப்பட்ட ரீசேரட்டும் இலட்சினையும் 3ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.இதேவேளை சமூக வலைத்தளங்களிலும் இந்த குறியீடுகள் பரப்பப்பட்டு லட்சக்கணக்கான விருப்பக் குறிகள் இடப்பட்டு திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com