சிங்கள மாணவர்களே மாணவர் ஒன்றியத் தலைவரைத் தாக்கினர் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு

kajenthirakumarயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற மோதல் சம்பவத்தில் சிங்கள மாணவர்களே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி.சிசிதரனை தாக்கியதாகத் தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல்கலைக்கழகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் பிரகாரம் அமைதியான சூழலொன்றை ஏற்படுத்த பாடுபட்டுவரும் அவர் மீது திட்டமிட்டு இராணுவப்புலனாய்வின் பின்னணியில் கைது முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதாவெனவும் அவர் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே பொலிசார் கைது செய்வதற்கான நடவடிக்கைக்குத் தயாரானபோது முன்பிணைகோரி யாழ் நீதிமன்றில் ஆஜரான யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி.சிசிதரனை தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல யாழ் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (20) அனுமதியளித்துள்ளது.

அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். மேற்படி சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், மாணவன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவர் ஒன்றியத் தலைவரை செவ்வாய்க்கிழமை (19) கோப்பாய் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தினர். இந்நிலையில் மாணவன் கைதுசெய்யப்படலாம் என்ற நிலையில், பிணை விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com