சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம்?

சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம்?

சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலின்போது, இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் வருடம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனமொன்றிடம் வழங்கியுள்ளதால் நாட்டுக்கு கிடைக்கவேண்டிய பணம் வெளிநாட்டுக்கு செல்கின்றது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மிகக்குறைந்த செலவில் வாகனசாரதி அனுமதிப்பத்திரத்தினை இராணுவத்தினால் தயாரிக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார் என்றும் இது தொடர்பாக இராணுவம் மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக போக்குவரத்து அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com