சற்று முன்
Home / செய்திகள் / சர்வதேச விசாரணையை வலியுறுத்தி திருகோணமலையிலும் கையெழுத்துப் போராட்டம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி திருகோணமலையிலும் கையெழுத்துப் போராட்டம்

இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள்  மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றின் ஊடாகவே விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்தியும்,  எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறை மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதனை வெளிப்படுத்தியும்  இவற்றினை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலான கையெழுத்துப் போராட்டத்தினை மேற்படி எமது அமைப்பு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.


யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பமாகி இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் முதற் கட்டமாக திருகோணமலை நகரில் சிவன்கோவில் முன்பாக இன்று  திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு கையெழுத்துப் போராட்டம் ஆரம்பமாகியது. 
இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட முன்னைனாள் போராயர் வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களும் கலந்துகொண்டு தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுள்ளார். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com