சர்வதேச மீன் மற்றும் கடலுணவு கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

சர்வதேச மீன் மற்றும் கடலுணவு கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு விகாரமஹாதேவி திறந்த கலையரங்கில் நேற்று பிற்பகல் ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை வரை இடம்பெறும்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடலுணவு மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளை பிரபல்யப்படுத்தும் நோக்குடன் மீன்பிடி, நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன.

கண்காட்சியை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, உள்நாட்டு வெளிநாட்டு மீன் மற்றும் கடலுணவு கண்காட்சி கூடங்களை பார்வையிட்டார்.

மீன் மற்றும் கடலுணவு மேம்பாட்டுக்காக நீண்ட காலம் பணியாற்றிய நாரா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் மங்கலிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com