சற்று முன்
Home / உலகம் / சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்

சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்

கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக, பா.ஜ.க-வைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதநிலையில், அதிகபட்சமாக 104 எம்.எல்.ஏ-க்களைப் பெற்ற பா.ஜ.க-வை ஆட்சியமைக்க அழைத்தார், கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா. அதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், ‘எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்பதற்குத் தடைவிதிக்க முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு, ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 3-வது முறையாக அவர் முதல்வராக பதவியேற்கிறார். ஏற்கெனவே, 2007-ல் குமாராயுடன் கூட்டணி அமைத்து முதல்வராகப் பதவியேற்றார். பின்னர், மீண்டும் 2008-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரானார். அவருடன் சேர்ந்து அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com