சர்சைக்கு உரிய மயில் மாளிகையில் தங்ககட்டிகள் ?

நாவல பிரதேச வர்தகரான ஏ.எஸ்.பி.லியனகேவுக்கு சொந்தமான  மயில் மாளிகையில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் மண் நிரப்பி மூடபட்டு  இருந்த நிலையில் மூடப்பட்ட மண்ணை அகற்றும் பணிகள் வெள்ளிக்கிழமை  இடம்பெற்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து. மயில் மாளிகையை மஹிந்த ராஜபக்ஷ தங்குவதற்கு வழங்க லியனகே தயாராகியிருந்த போதும் ஹிந்த ராஜபக்ஷ அங்கு தங்கவில்லை.
அதன் பின்னர் சர்ச்சைக்கு  உரிய பேசு பொருளாக மயில் மாளிகை மாறியது. அதேவேளை அங்கிருந்த நீச்சல் தடாகம் மண் கொண்டு மூடப்பட்டது. 
அதனையடுத்து, குறித்த நீச்சல் தடாகத்தில் தங்க கட்டிகள் புதைக்கப்பட்டுள்ளதாக வாய்வழி கதைகள் பரவியிருந்தன. அதற்கமைய, கொழும்பு குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் முன்னிலையில் குறித்த நீச்சல் தடாகத்தில் மண்ணை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds