சரா ஒரு வியாபாரி ! – அவரின் சலசலப்புக்கு அஞ்சமாட்டோம் !! – சுரேஸ் பதிலடி !!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபன் ஒரு வியாபாரி. அதனை தவிர்த்துப் பார்த்தால் அவர் ஒன்றுமே இல்லாதவர். ஆகையினால் அவரது மிரட்டல்களுக்கு அஞ்சத் தேவையில்லை. அவ்வாறு அஞ்சுகின்ற நிலைமையில் நாங்களும் இல்லை. இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு பதிலடி வழங்கியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடியை பெற்றுதாக கருத்து வெளியிட்டுள்ள சக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு சிக்கல்கள் வருமென்று சக பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அவரது கருத்து தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியிலாளர் சந்திப்பின் போது சுரேஸ்பிரேமச்சந்திரனிடம் எழுப்பபட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததற்காக இரண்டு கோடி ருபா நிதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கின்றார்.
அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் பேசுகின்ற போது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே போனார்கள். அங்கு இருந்தார்களாயின் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். அங்கு ஏன் இதனை மறுதலிக்கவில்லை. அங்கு பேசாமல் இருந்து விட்டு இங்கு வந்து வௌ;வேறு கருத்துக்களை ஏன் வெளியிடுகின்றனர்.
ஆகவே சரவணபவன் போன்றவர்களின் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ஞப் போவதில்லை. அவர் ஒரு சருகு புலி போலத் தான் பார்க்கிறோம். மேலும் ஒரு வியாபாரி. அதனை தவிர்த்து பார்த்தால் அவர் ஒன்றுமே இல்லாத ஒருவர். அவருi டய மிட்டல்களுக்கு அஞ்சும் நிலையில் நாங்கள் இல்லை என சுரேஸ் பிறேமச்சந்திரன் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com