சரத் என் சில்வாவின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு இடையீட்டு மனு!

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு, இடையீட்டு மனுவொன்று, நேற்று (02) தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறே இடையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது, நாடாளுமன்றத்தில் அண்மையில்  நிறைவேற்றப்பட்ட, மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை,  இரத்துச்செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில், கடந்த 28 ஆம் திகதியன்று அவர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த திருத்தச் சட்டமூலமானது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என்றும் அந்தத் திருத்தத்தை உடனடியாக இரத்துச்செய்யுமாறே, அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

அந்த மனுவில், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

​இ​டையீட்டு மனுவை, ஹதபான்கொட-பாதுக்கை வீதியைச் சேர்ந்த உனவட்டுனு கொஸ்வத்தகே அருன லக்சிறி என்ற சட்டத்தரணி, தாக்கல் செய்திருந்தார். அவரும் தன் மனுவில், மேற்குறிப்பிட்டோரையே பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரால் கையொப்பமிடப்பட்டுள்ள சட்டத்தின் பிரகாரம் செயற்படாமல், ஏற்கெனவே, அமுலிலிருந்த, 1988 இலக்கம் 2 மாகாண சபைகள் மற்றும் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறு உத்தரவிடுமாறே, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் தாக்கலி செய்யப்பட்ட அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com