சரத் என்.சில்­வாவின் மனுக்கள் மீது இன்று விசாரணை!

மாகாண சபைத் தேர்­தல்கள் திருத்தச் சட்­டத்­துக்கு எதி­ராக முன்னாள் பிரதம நீதி­ய­ரசர் சரத் என்.சில்வா தாக்கல் செய்த அடிப்­படை உரிமை மனு­வுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட மனுக்கள் இன்று(9) திங்­கட்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

நாடாளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட மாகாண சபைத் தேர்­தல்கள் திருத்தச் சட்­ட­மா­னது, அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­திற்கு முர­ணான வகை­யி­லேயே நிறை­வேற்­றப்­பட்­ட­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்டு முன்னாள் பிரதம நீதி­ய­ரசர் சரத் என்.சில்­வா­வினால் கடந்த 28ஆம் திகதி அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்று உயர்­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டது.

குறித்த அடிப்­படை உரிமை மீறல் மனு­வுக்கு எதி­ராக கடந்த வெள்­ளிக்­கி­ழமை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்டநாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனாதிபதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன், சட்­டத்­த­ரணி ரஜிக கொடித்­து­வக்கு, புர­வெசி பலய அமைப்பின் இணைப்­பாளர் காமினி வியாங்­கொட ஆகியோர் தனித்­த­னி­யாக நான்கு மனுக்­களை தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

இந்­நி­லை­யி­லேயே அம்­ம­னுக்கள் மீதான விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ளன. குறித்த மனுக்கள் மீதான விசா­ர­ணைகள் கால­தா­ம­த­ம­டையும் பட்­சத்தில் ஆயுட்­காலம் நிறை­வ­டைந்­துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் காலதாமதமாகும் நிலை இருப் பதன் காரணத்தாலேயே அவசரமாக விசார ணைக்கு எடுக்கப்படுவதாக தெரியவரு கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com