சற்று முன்
Home / செய்திகள் / சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? – இராணுவத்தை நெருக்கும் சர்வதே அமைப்பு

சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? – இராணுவத்தை நெருக்கும் சர்வதே அமைப்பு

முள்ளிவாய்க்கால் இறுதிப்போாில் 2009.5.18ம், 19ம் திகதிகளில் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்து பின்னா் காணாமல்போனவா்களு க்கு என்ன நடந்தது? அதனை காணாமல்போனவா்களின் குடும்பங்களுக்கு சிறீலங்கா இராணுவம் கூறவேண்டும் என இரு சா்தேச அரசாா் பற்ற மனித உாிமை அமைப்புக்கள் கூட்டாக கேட்டுள்ளன.

படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்கள் குறித்து ஆராய்ந்து வரும் இரு சர்வதேச அமைப்புகளே இந்த அறிக்கையை விடுத்துள்ளன.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மனித உரிமை தர ஆய்வு குழு ஆகிய அமைப்புகளே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன

அதிகளவானவர்கள் காணாமல்போன நாடுகளில் இலங்கையும் ஒன்று என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள் 500 பேர் ஒரே இடத்தில் ஒரே தருணத்தில் காணாமல்போனமை மிக முக்கியமான விடயம் ஒரே தருணத்தில் பெருமளவானவர்கள் காணமற்போன சந்தர்ப்பம் இது என இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

2009 இல் சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்களின் பாரிய எண்ணிக்கை காரணமாக இது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் இதற்கு பதிலாக ஒரு வருடம் கடந்துவிட்டது, இன்னமும் எவரும் 58 வது படைப்பிரிவின் தளபதியாகயிருந்தவரிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் பகுதியிலிருந்து வந்தவர்கள் படையினரிடம் சரணடையும்போது அப்பகுதியில் 58 படைப்பிரிவின் தளபதி காணப்பட்டார் என ஐநாவின் தகவல்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சியங்கள் மூலம் அறிய முடிந்துள்ளது என யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிற்கு ஜெனரல் தரத்திற்கு பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதும் இதன் காரணமாக அவர் இராணுவத்தின் மனித உரிமை விவகாரங்களிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளமையும் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிற்கு செய்யும் அவமரியாதை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தவர்களிற்கு பதில் வழங்கப்படவேண்டும்,அவர்களிற்கு உண்மையை அறிவதற்கான உரிமையுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது காணாமல்போனவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஐடிஜேபி கடந்த பல வருடங்களாக ஈடுபட்டுள்ளது தற்போது அதனிடம் 300 பேரின் படங்களும் பெயர்களும் உள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

2011 இல் நாங்கள் சரணடைந்தவேளை காணாமல்போன 20 பேரின் விபரங்களை பெற்றோம்,2014 இல் அது 103 ஆக அதிகரித்தது,இவ்வருட ஆரம்பத்தில் இந்த எண்ணிக்கை 280 ஆக அதிகரித்தது தற்போது எச்ஆர்டீஏஜி அமைப்பு சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்களின் எண்ணிக்கை 500ற்கும் அதிகம் என கருதுகின்றது என யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com