சயிட் அல் ஹூசெய்ன் – ரணில் பேச்சு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அலரி மாளிகையில் இந்த சந்திப்புநடைபெற்றுள்ளது.
இலங்கைக்கு கடந்த சனிக்கிழமை விஜயம் செய்த அல் ஹூசெய்ன் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை மேம்பாடு மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்தும் அரசாங்கம் அதனை மேற்கொள்வதில் எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com