சம்பூரில் 177 ஏக்கர் காணிகள் கையளிக்கும் நிகழ்வு!

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் பாதுகாப்பு கரணங்களின் நிமித்தம் கடற்படை வசமிருந்த 177 ஏக்கர் காணிகளை விடுவித்து பொதுமக்களுக்கு காணிகளை கையளிக்கும் உத்தியோக பூர்வ நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சம்பூரில் நடைபெற இருப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.
குறித்த நிலப்பகுதியில் மொத்தமாக 546 குடும்பங்கள் மீள்குடியேறவுள்ளதுடன் சம்பூர் மஹா வித்தியாலயம் அமைந்திருந்த காணியும் விடுவிக்கப்படும் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ளது.

காணிகளை மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் எதிர்க்கட்சித்தலைவர் ஆர். சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மற்றும் இந்து மத அலுவல்கள் விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் உட்பட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச உயரதிகாரிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com