சம்பள உயர்வு தொடர்பில் தோட்ட நிர்வாகத்திற்கு ஒரு வார காலம் அவகாசம் – தொழிலாளர்கள் தெரிவிப்பு – உண்ணாவிரதத்திற்கும் முஸ்தீபு

தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயபூர்வமான சம்பள உயர்வு கிடைக்கப்பட வேண்டும் என கோரிக்கைவிடுத்து சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்றை குறித்த தோட்ட அதிகாரியிடம் கையளித்து 26.09.2016 அன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஸ்டர்ஸ்பி தோட்ட தொழிற்சாலையின் முன் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது பின்தள்ளப்பட்டிருக்கும் சம்பள பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை ஆகியவற்றை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இதற்கென ஒரு வார கால அவகாசத்தை தாம் தோட்ட நிர்வாகத்திற்கு வழங்குவதாகவும், தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த கால அவகாசத்திற்கு பின் தீர்வு எட்டப்படாவிடின் உண்ணாவிரத போராட்டத்திலும், ஈடுப்படபோவதாக இதன்போது தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மற்றும் பல போராட்டங்கள் 26.09.2016 அன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா லக்ஷபான ஆகிய தோட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிதக்கது.dsc04393 dsc04397 vlcsnap-2016-09-26-12h11m39s39 vlcsnap-2016-09-26-12h12m17s169

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com