சற்று முன்
Home / செய்திகள் / ”சம்பந்தரே மன்னியுங்கள்” – காலில் விழுகிறது தமிழரசு !

”சம்பந்தரே மன்னியுங்கள்” – காலில் விழுகிறது தமிழரசு !

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை கண்டித்து வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வில் அவசர பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.

வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு இன்று 25 ஆம் திகதி கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ளது,
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உரையை குறுக்கீடு செய்து குழப்பிய அநாகரிக செயலை இந்த சபை கண்டிப்பதுடன் இந்த செயல் தொடர்பில் பொது மக்களிடம் கவலையையும் மன்னிப்பையையும் கோருவதுடன் , அதனால் சம்பந்தனுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதுடன் , மன்னிப்பையையும் இந்த சபை கோருகின்றது என  அமர்வில் அவைத்தலைவரினால்  அவசர பிரேரணையை முன் வைக்கப்படவுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com