சம்பந்தனைச் சந்தித்தார் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பரின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, கொழும்பு 7இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மாலை 04 மணியளவில் சந்தித்துக் கலந்துரையாடினார். சுமர் அரை மணித்தியாலங்களுக்க மேலாக நீடித்த இந்தச் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் உடனிருந்துள்ளார்.
இச்சந்திப்பின்போது காணாமல் ஆக்கப்பட்டடோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடயம் மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. அத்தோடு நிரந்த அரசியல் தீர்வினை எட்டும் முயற்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மகாநாயக்கர்களின் தலையீடுகள் ஸ்திரமற்ற ஆட்சிநிலை என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com