சமுர்த்தி உத்தியோகத்தரால் வெளிவிவகார அமைச்சின் உத்தியோகத்தருக்கு கொலை அச்சுறுத்தல்.பொலீஸ் வலைவீச்சு.

யாழ் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும்  சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரினால் கொழும்பு வெளிவிவகார அமைச்சில் கடைமை யாற்றும் பெண் அதிகாரி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த பெண் அதிகாரி உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலீசார் சமுர்த்தி உத்தியோகத்தரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிய வருகின்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் வெளிவிவகார அமைச்சில் கடைமையாற்றும் உத்தியோகத்தர் முகநூலின் மூலம் நட்பாகி தனது உறவினர் ஒருவர் கனடா செல்ல விசா எடுத்து தருமாறு பின் கதவால் முயற்சி மேற்கொண்டுள்ளார். எனினும் அமைச்சின் உத்தியோகத்தர். இவரை அவரது கோவைகளை தனக்கு யாழில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்து அனுப்புமாறும் அமைச்சின் கணக்குக்கு உரிய தொகையை வைப்பிலிடுமாறும் பணித்துள்ளார்.

இதனையடுத்து இவையனைத்தையும் உடனடியாக நிறைவேற்றினார் சமுர்த்தி உத்தியோகத்தர். எனினும் சட்ட ரீதியாக அமைச்சின் அலுவலர் இவரது விடயத்தை கையாண்டு உரிய கனடா தூதுவராலயத்திற்கு அமைச்சினூடாக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

எனினும் தூதுவராலயம் இவரது ஆவணங்கள் தவறானவை இவை போலியானவை என கூறி சமுர்த்தி உத்தியோகத்தரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை தூதுவராலயம் அவரது வீட்டு விலாசத்துக்கு திருப்பிஅனுப்பியது.இதனையடுத்து முகநூலில் நட்பாக இருந்த வெளிவிவகார அமைச்சு உத்தியோகத்தரை தொலைபேசியூடாக அச்சுறுத்தியதோடு தனது உறவினர் நண்பர்கள் மூலமும் பல தடவைகள் அந்த உத்தியோகத்தரை கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பில் விசாரணை நடாத்த அமைச்சு அதிகாரிகள் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை கொழும்பு அமைச்சுக்கு அழைத்த போதும் அவர் கொழும்பு செல்லாது தொடர்ச்சியாக அந்த உத்தியோகத்தியோகத்தரை அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரியினால் சமுர்த்தி உத்தியோகத்தரை கைது செய்யுமாறு கோரி பொலீசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். இது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com