சமாதான முயற்சியில் தோல்விகண்டுவிட்டோம் – நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, அரசியல் நிகழ்ச்சிரலுக்கு அமைய கொண்டுவரப்பட்ட ஒன்று எனச் சாடியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன் நாட்டில் சமாதனத்தை ஏற்படுத்தும் முயற்சி தோல்வி கண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாரபட்சமின்றி ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த காலத்தைப் பார்க்கும் போது, அது அரசியல் நிகழ்ச்சி நிரல் என புலனாவதாக அவர் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஏன் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தார்களென கலந்துரையாட வேண்டும். பிரதமருக்கு மத்திய வங்கி விவகாரத்துடன் தொடர்பு இருப்பதற்கான சாட்சிகள் முன்வைக்கப்பட வில்லை. இந்த சம்பவம் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்றது எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நாடாளுமன்றில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்த செயற்பட முன்வரவேண்டும்.

இந்து சமுத்திரத்தின் பொருளாதார மையமாக எம்மால் மாறமுடியும், எனினும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளோம் என அவர் தனதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com